fbpx
Homeபிற செய்திகள்களை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கு பரிசுமழை: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 26 பேர்...

களை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வீரர்களுக்கு பரிசுமழை: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 26 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 26 பேரில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். அதிலும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு.

ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று (தை மாதம் 3-ம் நாள்) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண் டும் பொங்கல் நாளில் அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பால மேட்டிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடந்தது.

3-வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். ஆனால் அன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்தது. எனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு இன்று (17-ந் தேதி) அரசு வழிகாட்டுதல்படி கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றது.

இதற்காக 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனு மதி பெற்றுள்ளனர். அதிகாலை 6.30 மணிக்கு காளியம்மன் கோவில் அருகில் உள்ள வாடிவாசல் முன்பு மாடு பிடி வீரர்கள் திரண்டனர். வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் காளைகளும் வரிசைகட்டி நின்றன.

கலெக்டர் அனிஷ் சேகர் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அதன் பிறகு அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் வாடி வாசலில் இருந்து கிராமத்து காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் தகுதி பெற்ற 700 காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப் பட்டன.

திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் கலந்து கொண்டன. இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. அந்த காளைகளை பிடிக்க முடியாமல் வீரர்கள் பின் வாங்கினர்.

அதே நேரத்தில் பல காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் மடக்கி பரிசுகளை வென்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதி பெற்ற 300 மாடுபிடி வீரர்களும் ஒவ்வொரு சுற்றாக 50 பேர் வீதம் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடி தேர்வு பெறும் சிறந்த காளைக்கு முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

மேலும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் பிடிபடாத அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைகளை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து முடி வெடுக்க உள்ளனர். அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறுபவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் அனைத்து மாடுபிடி வீரர் களுக்கும் தங்க நாணயம் வழங்கப்பட்டது. விழா குழுவினர் சைக்கிள், வேட்டி, துண்டு உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினர். காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டு திடலில் தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது.

பார்வையாளர்கள் அமருவதற்காக காலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், கேலரி, மாடுகள் நிறுத்தப்படும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். காயம் அடைந்த வீரர்களை ஏற்றி செல்ல ஆம்புலன்சு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருந்தது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் 8 கூடுதல் காவல் கண் காணிப்பாளர்கள், 31 துணை சூப்பிரண்டுகள், 7 கூடுதல் சூப்பிரண்டுகள், 62 காவல் ஆய்வாளர்கள், 182 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
வெளியூரில் இருந்து வரும் பார்வையாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் தானியங்கி ஒலிபெருக்கி மூலம் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல் லிக்கட்டு விழாவை வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் மூலமாக கண்டுகளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல் லிக்கட்டில் 3வது சுற்று நிறைவு பெற்ற நிலையில் 379 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு இருந்தன. 7 பேர் காயம டைந்தனர். 4வது சுற்று முடிந்த நிலையில் காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்திருந்தனர்.

காயமடைந்த 26 பேரில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 400 ஆண்டுகள் பழமையானது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில், வாடிவாசலில் இருந்து காளையின் திமிலை பிடித்தபடி சுமார் 50 அடிக்குள் அருகிலிருக்கிற மாரியம்மன் கோயில் வரை விழாமல் சென்றாலே வெற்றிதான்.

கொரோனா தொற்றுக் காலம் என்பதால் 300 வீரர்கள், 700 காளைகளுடன், 150 பார்வையாளர்கள் என அரசு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
வெளியூர் பார்வை யாளர்களுக்கு அனுமதி இல்லை. பாரம்பரியம் பேணி, நாட்டு மாடுகள் இனம் காக்க தமிழக அரசு தரும் ஆதரவு மகத்தானது.

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி கிராமத்தில் இன்று நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 37 பேர் காய மடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img