fbpx
Homeபிற செய்திகள்பள்ளி மாணவர்களுக்கு நாட்காட்டி

பள்ளி மாணவர்களுக்கு நாட்காட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றி யம் கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஓலைப்பட்டி விவாஷ் மருத்துவமனை, மெடிக்கல்ஸ் மற்றும் விவாஷ் நேச்சுரல்ஸ் திம்மராயன் வழங் கிய நாட்காட்டி, பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைமை ஆசிரியரின் தங்கை தேவக்கோட்டை ஜுவா-ரமேஷ் மற்றும் பள்ளி மேலாண் மைக்குழுவும் இணைந்து வழங்கிய விளையாட்டு ஆடையும் (ஸ்போர்ட்ஸ் டிரஸ்) வழங்கப்பட்டது.

வட்டாரக்கல்வி அலுவ லர் லோகநாயகி, ஒன்றிய கவுன்சிலர் வீரபத்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், துணைத்தலைவர் காலாபாய், வார்டு உறுப்பினர் சிவக்குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜானகி மற்றும் உறுப்பினர்கள், காமதேனு கார்மன்ஸ் வேலு, யோகேஸ்வரன், ஹரீஷ்குமார் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், அறம்விதை அறக்கட்டளை பொறுப் பாளர்கள், மகளிர் குழுவினர், இல்லம் தேடிக் கல்வி இயக்க தன்னார்வலர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர். தலைமை ஆசிரியர் சி.வீரமணி நிகழ்ச்சியினை ஒருங்கி ணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img