fbpx
Homeபிற செய்திகள்சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் ,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை காவிரி மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண் டார்.

இந்த நிலையில், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத் தியிருந்த நிலையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img