நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று கட்டுபாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறதா என்பதனை உறுதி செய்ய வேண்டுமென்று அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனப்பிரியா, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



