கோவையில் குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டி மூடப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் மீண்டும் புதைந்ததால் அங்கு நிறுத்தப்பட்ட கார்கள் வரிசையாக பள்ளத்தில் சிக்கின.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் வழங் கும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.646.71 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணியை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது.
இந்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்காக தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படாத தால் மாநகரில் ஆங் காங்கே சிறு சிறு விபத் துகளும் ஏற்பட்டு வருகி றது.
இதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென குடிநீர் குழாய் உடைந்தது. தோண்டி மூடப்பட்ட குழியில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் குழிக்குள் புதைந்தன.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தில் புதைந்த கார்களை பொக்லைன் இயந்திரத்தை வைத்து வெளியே எடுத்தனர்.
வரிசையாக வாகனங் கள் பள்ளத்தில் மாட்டிக் கொண்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவ திக்கு உள்ளாகினர்.



