திருப்பூர் மாவட் டம், குண்டடம் ஊ ராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சி மேட்டுக்கடை, காணிக்கம்பட்டி, தும்பலப்பட்டி ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.28.09 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு ஊரக வளர்ச்சித் துறையின் சார் பில் கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம்,
நந்தவனம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.05 இலட்சம் மதிப்பீட்டில் விவசாயி தோட்டத்தில் மண் வரப்பு அமைக்கும் பணி நடக்கிறது.
ரூ.3.69 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, காணிக்கம்பட்டியில் ரூ.5.50 இலட்சம் மதிப் பீட்டில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி, ரூ.4.87 இலட்சம் மதிப்பீட்டில் அடர்வு முறையில் மரக்கன்றுகள் நடும் பணி, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் மேட்டுக்கடையில் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளிக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடு என மொத்தம் ரூ.28.09 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச் சிப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட் டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வில், குண்டடம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அய்யாச்சாமி, குருவம்மாள், உதவி செயற்பொறியாளர் சீனிவாச பிரபு, உதவி பொறியாளர்கள் கார்த்திக்ராஜா, லோகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



