கோவை எஸ்.எஸ். குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுரேஷ்குமார் & போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியம்வதா ஆகியோரின் மகள் தன்யதா(வயது 14). இவர் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான 73 வது சைக்கிள் டிராக் சாம்பியன்ஷிப் போட் டியில் சப்-ஜூனியர் பிரி வில் 500 மீட்டர் மற் றும் 6 கிலோ மீட்டர் குழு பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
இதையடுத்து தன்னு டன் விளையாடிய தூத் துக்குடியை சேர்ந்த ஜேசுதாஸ்& -ஜெனிதா தம்பதியினரின் மகள் ஸ்ரீமதியுடன்(16), தன் யதா விமானம் மூலம் நேற்று கோவை திரும் பினார். அப்போது அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் வருகிற 2024-ம் ஆண்டு ஜப்பானில் நடை பெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் சைக்கிள் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்குபெறும் அணிக்கான தேர்வில் தன் யதா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



