கோவை மாவட்ட அளவிலான கபடி போட்டி கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் நடைபெற்றது. இளம்மலர் கபடிக்குழு மற்றும் லட்சுமி கார்டன் நண்பர்கள் குழு சார்பாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் மாவட்டத்தில் இருந்து 42 அணிகள் கலந்து கொண்டன.
நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் இளம்மலர் கபடி குழு, கே.சி.கே கபடி குழு, குறிஞ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் ,சிவகுமார் கபடி குழு ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
பின்னர் கே.சி.கே கணுவாய் கபடி குழுவும் குறிஞ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. கே.சி.கே கணுவாய் கபடி குழு 21க்கு 16 புள்ளிகளில் குறிஞ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழுவை வென்று கோப்பையை தட்டிச் சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு வென்ற கே.சி.கே கணுவாய் கபடி குழுவிற்கு 9வது வார்டு உறுப்பினர் மோகன் 6 அடி உயர கோப்பை மற்றும் 11000 ரூபாய் பணமுடிப்பும் பரிசாக வழங்கினார்.
இரண்டாம் இடம் பெற்ற குறிஞ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழுவிற்கு சீசான இன்ஜினியரிங் உரிமையாளர் ரமேஷ் 5அடி உயர கோப்பையும் 8000 ரூபாய் பணமுடிப்பும் வழங்கினார். மூன்றாவது, நான்காவது இடம் பிடித்த அணிகளுக்கும் கோப்பை மற்றும் பணமுடிப்பு வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சந்திரன், ரித்தீஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



