கோவையில் குப்பை சேகரிக்கச் சென்ற பெண் தூய்மை பணியாளர் மீது தாக்குதல் நடத்திய வடமாநில வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் திடீர் போ ராட்டம் நடத்தினர்.
கோவை மாநகராட்சியில் தூய் மை பணியாளராக பணிபுரிந்து வருபவர் ஜோதியம்மாள். இவர் இன்று காலை கோவை ரங்கே கவுண்டர் வீதியில் குப்பை களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வடமாநில தொழிலாளி வினோத் ஜெயின் என்பவரிடம் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம்பிரித்து தர கோரியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த வினோத், ஜோதியம்மாளை கடுமையாக தாக் கியுள்ளார்.
இதில் ஜோதியம்மாளுக்கு கண் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை மீட்ட சக பணியாளர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதனிடையே இன்று காலை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக வடமாநில வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், தாக்குதலில் காயமடைந்த தூய்மை பணியாளரை கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியரை வடமாநில வாலிபர் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



