fbpx
Homeபிற செய்திகள்குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள்

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள்

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள், குடியரசு தின விழாவையொட்டி நடை பெறும் நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகி உள்ளனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி ஆஸாதிகா அம்ரித் மஹோத் சவ் என்ற விழாவை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதனையொட்டி மத்திய பாது காப்பு அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகமும் முன்னெடுத்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நடனக்குழுக்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

ஆன்லைனில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான போட்டி களில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் 18 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் கொண்ட “அக்னி பிரவா”என்ற குழு தேர்வு பெற்றது.

பின்னர் பெங்களூருவில் நேரடியாக நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியிலும் தேர்வு செய் யப்பட்டு, புதுடில்லியில் நடைபெற்ற வந்தே பாரதம் நிருத்ய உத்சவ்வின் இறுதி போட்டியில் தங்களது முழு முயற்சியை அளித்து கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி வெற்றி பெற்று குடியரசு தின விழாவையொட்டி நடைபெ றும் நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகியுள்ளது.

இதற்காக தேர்வு செய்யப் பட்டு கல்லூரிக்குப்பெருமை சேர்த்த இந்த குழுவையும், மாண வர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர்கள், ஊக்கமும் ஆதரவும் தந்த மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மு. அகிலா அனைவரையும், கல்லூரி நிறுவனரும் கே.பி.ஆர் குழுமங்களின் தலைவருமான டாக்டர் கே.பி.ராமசாமி வெகுவாக பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img