தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளியில் ரூ.4.65 கோடி மதிப்பில் நடைபெறும் புதிய தார் சாலை அமைக்கும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருகில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி/ திட்ட இயக்குநர்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வைத்திநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



