fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பூச்சிகளை உண்ணும் தாவரங்கள்

கோவையில் பூச்சிகளை உண்ணும் தாவரங்கள்

பூச்சிகளை உண் ணும் தாவரம் கேள்விப் பட்டதுண்டா நீங்கள்? பள்ளி பாடப்புத்தகத்தில் நீங்கள் படித்த ‘நெப் பென்டிஸ்’ என்ற அந்த விசித்திர தாவரம், கோவை யிலும் இருக்கிறது.

வேளாண் பல்கலைக் கழக பூச்சியியல் அருங்காட் சியகம் பின்புறம் இருக்கும் இந்த செடியை, நீங்கள் பார்வையிடலாம். ஒரு சில தாவரவியல் ஆர்வ லர்களும், இந்த செடியை வீட்டில் வளர்க்கின்றனர்.

இந்த செடிகளில் இருக்கும் ஒரு பை அல் லது குடுவை போன்ற அமைப்புதான் பூச்சிகளை கவர்ந்திழுக்கிறது. ஈ, கொசு போன்ற சிறு பூச்சிகள், இந்த பை போன்ற அமைப்புக்குள் சென்றால், அந்த தாவரம் அப்படியே விழுங்கி செரிமானம் செய்து விடும்.

குடுவையில் ‘பெப்சின்’ என்ற திரவமும், குடுவையின் வாயில் தேன் சுரப்பிகளும் இருக்கின்றன. கவர்ச்சிகரமான வண்ணம், புள்ளிகள், திட்டுக்களுடன் இருக்கும் குடுவை, சிறு பூச்சியினங்களை கவர்ந்திழுக்கிறது.

தேன், நிறம், வாசனை யால் கவரப்பட்டு செல்லும் பூச்சிகள், குடு¬ வயில் சறுக்கி கீழே விழு கின்றன. உள்நோக்கி வளைந்திருக்கும் குடுவை யின் முடிகளால், கீழே விழுந்த பூச்சியினங்கள் தப்பி மேலே வர முடிவதில்லை.

இப்படி வசமாக சிக்கிக்கொண்ட பூச்சிகளை, குடுவையில் இருக்கும் பெப்சின் திரவம் செரி மானம் செய்து விடுகிறது.’

இதன் மூலம் தனக்கு பற்றாக்குறையாக இருக்கும் நைட்ரேட், பாஸ்பேட் சத்துக்களை இந்த தாவரம் பெற்றுக்கொள்கிறது’ என்று தாவரவியல் ஆய் வாளர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img