தென்னக ரயில்வே எஸ்.ஆர்.எம்.யூ சேலம் கோட்ட கோவை தலைமை கிளையில் பணிமனை ஊழியர்கள் கிறிஸ் துமஸ் விழாவை கொண்டாடினர்.
குட்ஷெட் சாலையில் உள்ள தென்னக ரயில்வே சேலம் கோட்டம் கோவை தலைமை கிளை பணிமனையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பணிமனை ஊழியர்கள் கேக் வெட்டியும் கிறிஸ்துவ பாடல்களுக்கு நடனமாடியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
கோவை கிளை செயலாளர் ஜோன் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் 30க்கும் மேற்ப்பட்ட ரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



