சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற் றும் கேர் டி இணைந்து கோவை ஹோட்டல் சி.ஏ.ஜி.பிரைடில் மாவட்ட – அளவில் பஞ்சாலை களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் தங்கும் விடுதிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை (தெற்கு) வருவாய் கோட் டாட்சியர் வி.இளங்கோ தலைமை தாங்கினார்.
மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் பி.தங்கமணி பஞ்சாலை யில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகளை எவ்வாறு பதிவு செய்வது என்றும் உள்புகார்க் குழு அமைப்பது தொடர்பாகவும் பேசினார்.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர் டாக் டர்.எம்.கலைமதி, பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு அவர்களுடைய பணிச் சூழல், விடுதியை பராமரிக்கும் முறை குறித்து விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து கேர்டி இயக்குநர் சி.மா.பிரித்திவிராஜ் இக்கூட் டத்தின் நோக்கம் பற்றி பேசினார்.
திருச்சி, விவ்த் வீல் டிரைவ், இயக்குனரும், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளருமான பேராசிரியர் வெங்கடேசன் தங்கவேல் , தலைமைப் பண்பு, தொழிலாளர்களுடன் நடந்து கொள்ளும் முறை குறித்து விளக்கிப் பேசினார்.
வழக்கறிஞர் எஸ்.கிருஸ்துராஜ், உள்புகார்க் குழு, விடுதிகளை பதிவு செய்வது குறித்த சட்ட விதிகளை தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள 26 பஞ்சாலைகள் சார்ந்த மேலாளர்கள் மற் றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கேர் டியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மா.மோத்திராஜ் அனை வரையும் வரவேற்று பேசினார். பி.லீனா ஜஸ்டின் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் அருணா, மற்றும் கேர் டி அமைப்ப¬ச் சார்ந்த பஞ்சாலை பயிற்சியாளர்கள் வி.அஸ்வதி, டி.ஹரிஸா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



