fbpx
Homeபிற செய்திகள்அண்ணா அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

அண்ணா அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

அதிமுகவின் 50 ஆம் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன் னிட்டு அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 110 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா கோவை செல்வபுரத்தில் கட்டுமான பிரிவு கோவை புறநகர் மாவட்ட தலைவர் கன்மலை ஆர். முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

கட்டுமான பிரிவு மாநில பொருளாளர் கேவி.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.
கட்டுமான பிரிவு மாவட்ட செயலாளர் கேசி.வேலுச்சாமி, என். சிவக்குமார், ஆர். தங்கவேல், கே.குமார், கே.ஆனந்தன், பி. கண்ணையன், ஆர். பழனிச்சாமி, பி.ரங்கசாமி எம்.ஜேம்ஸ் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலா ளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலத்திட்ட உதவிகளையும், அடையாள அட்டைகளை யும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ, மாவட்டக் கழக இணைச் செயலாளர் எஸ்.மணி மேகலை, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆட்டோ எஸ்.ஜே.அசோக் குமார், ஆவின் மண்டலச் செயலாளர் ஆவின் எஸ்.முருகன், பகுதி செயலாளர் லாலி ரோடு விஜய், வார்டு செயலாளர்கள் கேஏ.காட்டுதுரை, குஞ்சாலி , கேபிள் பஷீர், கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ். விஜயலட்சுமி, எஸ். மஞ்சுளா, பி. பாலசுப் பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் மாவட்ட பொருளாளர் ஏ.கே.ஆர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img