fbpx
Homeபிற செய்திகள்காருண்யா பல்கலைக்கழகத்தில் 35 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்

காருண்யா பல்கலைக்கழகத்தில் 35 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்

கோவை, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனமான நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 35-வது ஆண்டு கல்விச் சேவையை நினைவு கூரும் வகையில், காருண்யா வளாகத்தில் 35 அடி உயர கிறிஸ்துமஸ்மரம் அமைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து உருவாக்கி உள்ளனர். 35 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை காருண்யா டிரஸ்டி சாமுவேல் பால்தினகரன், தனது துணைவியார் டாக்டர் ஷில்பாவுடன் திறந்து வைத்தார்.

காருண்யா நிகர் நிலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர், பதிவாளர் எலை ஜா பிளசிங் மற்றும் மாணர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img