குளிர்காலமான டிசம்பரில் சளியும், இருமலுக்கான பொதுவான அறிகுறிகள் ஏற்படுவது வழக்கமாகும். இந்த குளிர்காலத்தில் நமது உடலுக்கு கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது. சுவாச பராமரிப்பு உள்ளிட்ட உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது.
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஏற்படும் ஆர்வத்துடன் இருக்கும் நடிகை ராஷ்மிகா, பழங்கால பொருள்கள் மற்றும் யோகா போன்ற செயல்பாடுகளால் பல்வேறு பலன்கள் ஏற்படுவதாக நம்புகிறார்.
நடிகை ராஷ்மிகா கூறியது:
படப்பிடிப்புகளுக்காக நீண்ட நேரம் மகிழ்ச்சியுடன் செலவிட்டு எனது திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். அதேசமயம், டிசம்பரில் சூரிய அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளை எப்போதும் மகிழ்வுடன் கண்டுகளிப்பேன். இது என்னை பலத்த ஆரவாரங்களுக்கு இடையே அமைதியைத் தருகின்றன.
எனது ஒவ்வொரு பரபரப்பான தருணத்திலும் நான் மகிழ்ச்சியாக இருந்தாலும், சளி, இருமல் போன்ற உடல் உபாதைகளுக்கும் வித்திடுகின்றன.
சளி, இருமலுக்கான அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், எனது தாயார் விக்ஸ் வேபோரப்புடன் ஆவி பிடிக்கச் செய்து அந்த அறிகுறிகளில் இருந்து என்னை விடுபடச் செய்து விடுவார்.
விக்ஸ் வேபோரப்பில் உள்ள கற்பூரம், யூக்கலீப்டஸ் மற்றும் மென்த்தால் போன்றவை சளி, இருமல் போன்ற அறிகுறிகளில் இருந்து எப்படி நம்மை விடுபடச் செய்கிறது என்பதை அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.
எனது உடல் நல்ல முறையில் பராமரிக்க யோகா, நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் விக்ஸ் வேபோரப்புடன் ஆவி பிடிப்பது போன்றவை முக்கியமானவை ஆகும்.
சளி, இருமலுக்கான அறிகுறிகள் இருக்கும் போது ஒரு ஸ்பூன் விக்ஸ் எடுத்து சூடான தண்ணீரில் போடுவோம். தலையை போர்வையால் மூடி ஆவி பிடிப்பதால், சளி, இருமல் அறிகுறிகளில் இருந்து எளிதில் விடுபட்டு விடுவோம் என்றார்.
விக்ஸ் வேபோரப் கொண்டு ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஆவி பிடிக்கலாம். ஆனால், வேறு ஏதேனும் அலர்ஜி போன்றவை இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனைச் செய்யலாம். எப்போதும் பாட்டிலின் லேபிளில் உள்ள அம்சங்களை படிப்பது முக்கியம்.



