உலகின் ஃபேவரிட் ஜுவல்லரி ஷோரூம் ஜோயாலுக்காஸ், தனது கோவை, கிராஸ்கட் ரோடு ஷோரூமின் மறு திறப்பு விழா இன்று (டிச.18) நடந்தது. அதை முன்னிட்டு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு தலைசிறந்த டிசைன ரின் உதவியோடு இந்த ஷோரூமின் உட்கட்டமைப்பு பிரம்மாண்டமாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை வரவேற்க, ஷோரூமின் இட வசதி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஷோரூமிற்கு வரும்போது மீண்டும் ஒரு முறை உருவான புதிய ஷோரூம் என்ற உணர்வு வெளிப்படும். கோவை, கிராஸ்கட் ரோடு ஷோரூமின் மறுதிறப்பு விழவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாக, விசேஷமான சலுகைகளையும் அளிக்கிறது.
ஒவ்வொரு ரூ.50,000 மதிப்புள்ள தங்க நகை வாங்குவோருக்கு 200 மி.கி. தங்க நாணயம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
அதே போல் ரூ.25,000 மதிப்புள்ள வைர நகை வாங்குபவர்களுக்கு 200 மி.கி. தங்க நாணயத்தை முற்றிலும் இலவசமாக அளிக்கிறது. வரும் விழாக்காலங்களை முன்னிட்டு உலகத்தின் தலை சிறந்த புத்தம் புது டிசைன்கள், கலெக்ஷன்கள் இவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறது.
ஜோயாலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது: மதுரை மக்களின் அன்பும், ஆதரவும் எங்களுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
அதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. தற்போது கோவை ஷோரூமின் ஷாப்பிங் அனுபவம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, இந்த ஷோரூமை மறு சீரமைப்பு செய்து புதுப்பித்துள்ளோம்.
ஆண்டு முடிவை நோக்கி, புதிய ஆண்டின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக, தற்போது மறு திறப்பு விழா காணும் எங்கள் ஷோரூமின் உட்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.
அழகான இந்த சூழலில் அற்புதமான டிசைன்கள் எல்லையில்லா கலெக்ஷன்கள், தலைசிறந்த சேவை அனைத்தையும் நாங்கள் ஓரிடத்தில் அளிக்கிறோம் என்றார்.
ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி தற்போது தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் உள்ள பல்வேறு ஷோரூம்களை புதுப்பித்து தரம் உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.



