கோவையில் மாநில அள விலான தடகளப் போட்டியில் வென்ற காவலர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.
கோவை நேரு விளையாட்டரங்கில் 61வது மாநில அளவி லான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போட்டியில் நான்கு மண்ட லங்களை சேர்ந்த காவலர்கள், ஆயுதப்படை மற்றும் கமாண்டோ படையினர் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 100 மீ, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல் என 22 போட்டிகள் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சென்னை மாநகர காவல்துறை யினர் 333 புள்ளிகள் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். இரண் டாவதாக ஆயுதப்படை போலீசார் 221 புள்ளிகள் பெற் றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், “விளையாட்டுக்கும் காவல் துறைக்கும் நல்ல தொடர்பு உண்டு. இந்த விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் தொடர்ந்து காவலர்கள் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.” என்றார்.



