ரியல் எஸ்டேட் துறையில் தென்னிந்தியாவின் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றான காசாகிராண்ட், வருடாந்திர நிகழ்வான கோல்ப் போட்டியை கோயம்புத்தூர் கோல்ப் கிளப் உடன் இணைந்து நடத்தியது.
காசாகிராண்ட் கோல்பெர்ஸ் கிளாசிக் டிரோபி என்ற கோப்பையை வெல்ல நடந்த போட்டியில் நாடெங்கிலுமிருந்து 100க்கும் அதிகமான கோல்ப் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இரண்டு நாள் நடைபெற்ற இப்போட்டியில் 18 முதல் 83 வயது வரையிலான பிரிவைச் சேர்ந்த 112 கோல்ப் விளையாட்டு வீரர்கள் மொத்தத்தில் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நெட் 0-24 (Nett 0-24) வகையினத்தின் கீழ் ராகவேந்தர் ஆர்.நாயுடு – சித்தார்த்தா (66) வெற்றியாளர்களாகவும் மற்றும் ராமகிருஷ்ணன் – கி.நேசராஜன் (66) ஆகியோர் ரன்னர்ஸ்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
கோபிநாத – சக்கோலா (72) ஆகியோர் கிராஸ் வகையினத்தின் கீழ் வெற்றியாளர்களாகவும் மற்றும் விக்னேஷ் – செந்தில்நாதன் (75) ஆகியோர் ரன்னர்ஸ்களாகவும் வெற்றிவாகை சூடினர். அவர்களுக்கு பரிசுக்கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
காசாகிராண்ட் நிறுவனத்தின் கோவை மண்டல இயக்குனர் செந்தில் குமார் கூறுகையில், கோல்ஃப் விளையாட்டை பிரபலமாக்குவது, அதிக விளையாட்டு வீரர்கள் பங்கேற்குமாறு ஊக்குவிப்பது மற்றும் அனைத்து நிலைகளில் உள்ள மக்களும் இவ்விளையாட்டில் ஈடுபடுமாறு அதை கிடைக்கச் செய்வது ஆகிய நோக்கங்களுக்காக தொடர்ந்து 10வது ஆண்டாக கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் உண்மையிலேயே பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறோம் என்று கூறினார்.



