ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு நின்றுகொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மீது அரசு பஸ் மோதியதில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயமடைந்தார். இதில் ஆம்புலன்ஸ் தேநீர் கடைக்குள் புகுந்தது.
ஈரோடு அரசு மருத்துவமனை முன்பாக ஏராளமான தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தினமும் நிறுத்தப்படுவது வழக்கம் இந்த நிலையில் நேற்று இரவு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாதிக் பாட்சா என்பவர் வழக்கம்போல தனது வாகனத்தை நிறுத்தி விட்டு வண்டியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மதுரையிலிருந்து ஈரோடு வழியாக காங்கேயம் செல்வதற்காக வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை பூ பாண்டி என்பவர் ஒட்டி கொண்டு வந்து உள்ளார்.
அரசு மருத்துவமனை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மீது பலமாக மோதியதில் ஆம்புலன்ஸில் உறங்கிக்கொண்டிருந்த சாதிக் பாஷா படுகாயமடைந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தின் அருகே தேநீர் கடைக்குள் ஆம்புலன்ஸ் புகுந்ததால் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.



