fbpx
Homeபிற செய்திகள்பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.102.16 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்- கூடுதல் ஆட்சியர் ஆய்வு

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.102.16 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்- கூடுதல் ஆட்சியர் ஆய்வு

தருமபுரி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் வைத்திநாதன், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.102.61 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கீழ்க் காணும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

பேளாரஅள்ளி ஊராட்சியில் திக்குவாசி கொட்டாய் பகுதியில் 2018-19 ஆம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்த பேவர்பிளாக் அமைக்கும் பணி, இருமாம்பட்டி கல்லேரியில் 2019-20 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப் பீட்டில் நடைபெற்று வரும் ஏரிக்கோடி அமைக்கும் பணி, செம்மநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு ரூ.3.61 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணி, ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் பச்சியப்பன் என்பவரது நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தனிநபர் பண்ணைக் குட்டை பணி மற்றும் அத்திமுட்லு ஊராட்சியில் 2020-21 ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெ.ரவி, ஜி.ரவிச்சந்திரன், உதவிப்பொறியாளர்கள் தமிழ்மணி, முருகேசன், பணி மேற்பார்வையாளர்கள் கண்ணன், மாணிக்கவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகி யோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img