fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் அருகே அதிநவீன ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பிடித்தது: ராணுவ அதிகாரிகள் 10 பேர் பலி -...

குன்னூர் அருகே அதிநவீன ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பிடித்தது: ராணுவ அதிகாரிகள் 10 பேர் பலி – முப்படை தளபதி பிபின் கதி என்ன?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி வனபகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் பயணம் செய்த 10 உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஹெலிகாப்டரில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ஆகியோரும் பயணம் செய்துள்ளனர். ஆனால் அவர்களது நிலை என்ன ஆனது? என்பது உறுதியாக தெரியவில்லை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது.
இங்கு நடக்கும் ராணுவ தளபதிகள் கூட்டத்தில் பங்கேற்க சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் 14 பேர் எம் ஐ 17-வி 5 ரக ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் ராணுவ அதிகாரிகள் பயணிப்பதற்காக ரஷ்யா வில் இருந்து வாங் கப்பட்டதாகும். இது 24 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது.

இந்த ஹெலிகாப்டர் வெலிங்டனை நெருங்கிய போது குன்னூரில் இருந்து சுமார் 10கிமீ தூரத் தில் உள்ள காட்டேரி வன பகுதியில் திடீரென விபத் துக்குள்ளாகி நொறுங்கி விழுந்து தீப்பிடித்தது. பனி மூட்டம் காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.

தகவல் அறிந்ததும் வெலிங்டன் ராணுவ அதி காரிகளும் வீரர்களும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். தமிழக போலீசார், தீய ணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்றனர்.

கோவை, உதகையில் இருந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்தனர். இதற்கிடையில் காயம டைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் இருந்து மருத்துவக்குழு அங்கு விரைந்துள்ளது.

இந்த விபத்தில் கடைசியாக கிடைத்த தகவல்படி 10 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர். இறந்தவர்கள் உடல்களை மீட்டு விபத்து நடந்த பள்ளத்தில் இருந்து மேலே தூக்கி வந்தனர்.

காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான ஹெலி காப்டர் 3 மணி நேரத் துக்கு மேலாக எரிந்து கொண்டிருந்தது.

அதனால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற் பட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த பிபின் ராவத், மற்றும் அவரது குடும்பத்தினர் நிலை என்ன என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

இது குறித்து பாதுகாப்பு துறை சார்பில் எந்த தகவலையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் மீட்பு பணியை தீவிர படுத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

தமிழக டிஜிபி சைலேந் திரபாபு குன்னூருக்கு விரைந்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் அவசரமாக கூடியது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிஙவிளக்கம் அளித்து பேசினார். மேலும் விபத்துகுறித்து விசாரிப்பதற்காக ராஜ்நாத் சிங் குன்னூர் வரவுள்ளார்,.
இந்த விபத்து நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img