fbpx
Homeபிற செய்திகள்வருகிற 11ம் தேதி தருமபுரி வருகைதரும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க...

வருகிற 11ம் தேதி தருமபுரி வருகைதரும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

வருகிற 11-ம் தேதி தருமபுரி வருகை தரும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி ஒருங்கி ணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், கி.பாரிமோகன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல. வேலுசாமி, மாநில துணை தலைவர்கள் சாந்த மூர்த்தி, பாடிசெல்வம், வன்னியர் சங்க மாநில செயலாளர் இரா.அரசாங்கம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி,சண்முகம், மாவட்ட தலைவர்கள் செல்வகுமார், இமயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். வருகிற 11-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசு கிறார். தர்மபுரிக்கு வருகைதரும் டாக்டர் ராமதாஸுக்கு கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

விவசாயிகளின் நலன் கருதி மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செல்லும் உபரிநீரை தர்மபுரி மாவட்ட அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பும் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் ஒன்றிய குழு தலைவர்கள் மகேஸ்வரி பெரியசாமி, கவிதா ராமகிருஷ்ணன், தொகுதி அமைப்பு தலைவர் டி.ஜி.மணி, மாநில நிர்வாகிகள் க.மாது, க.நம்பி ராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் இ.மா.பாலகிருஷ்ணன், நாகராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் சி.வி.மாது, கே.எஸ்.சரவணன், மாவட்ட நிர்வாகிகள் ராமலிங்கம், சின்னசாமி, வன்னியபெருமாள், சுதாகிருஷ்ணன், தகடூர் தமிழன், நகர செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்

படிக்க வேண்டும்

spot_img