fbpx
Homeபிற செய்திகள்‘மக்களைத் தேடி மக்களின் அரசு’ என்ற திட்டத்தின் கீழ் நீலகிரி பொதுமக்களிடம் நாளை மனுக்கள் பெறும்...

‘மக்களைத் தேடி மக்களின் அரசு’ என்ற திட்டத்தின் கீழ் நீலகிரி பொதுமக்களிடம் நாளை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மக்களைத்தேடி மக்களின் அரசு என்ற திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணும் வகையில் டிசம்பர் 1ம் தேதி அன்று காலை 10 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக் டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மக்களைத் தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளான பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத்திட்டம், சாதிச்சான்றிதழ்கள், நலவாரிய அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, சிறுதொழில் கடனுதவி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய வீடு ஒதுக்கீடு, திருமண உதவி, தையல் இயந்திரம், தோய்ப்பு பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்குதல், குடிநீர், சாலை வசதி, மின்வசதி மற்றும் கழிப்பிடம் வசதி போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படவுள்ளது.

உதகை வட்டத்தில் காந்தல் பென்னட் மார்க்கெட் சிஎஸ்ஐ பள்ளி, மியாஞ்சிப்பேட்டை நகராட்சி ஆரம்ப பள்ளி, ஸ்ரீசாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணபுரம் ராமகிருஷ்ண ஆரம்ப பள்ளி, இருதய ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் குன்னூர் வட்டத்தில் குன்னூர் ஒட்டுப்பட்டரை சமுதாயக்கூடம், கிருஷ்ணாபுரம் நகராட்சி ஆரம்பள்ளி, வண்டிப்பேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளி, வண்ணாரப்பேட்டை சமுதாயக்கூடம், ஆழ்வார்பேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களிலும், கூடலூர் வட்டத்தில் நந்தட்டி பள்ளி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளி, கூடலூர் எஸ்பிஐ வளாகம், மேல்கூடலூர் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் பந்தலூர் வட்டம் பொன்னூர் நாடுகாணி பஜார் சமுதாயகூடம், பந்தலூர் உப்பட்டி எம்எஸ்எஸ் உயர்நிலைப்பள்ளி, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவாலா ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களிலும் டிசம்பர் 1ம் தேதி காலை 10 மணி முதல் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் அதிகாரிகளால் பெறப்படுகிறது.

இதே போல சோலூர் பேரூராட்சி கூட்ட அரங்கம், எல்லநள்ளி சமுதாயக்கூடம், கேத்தி பாலாடா என்எஸ்எஸ் அய்யா அரசு மேல்நிலைப்பள்ளி, எடக்காடு மட்டம் சமுதாயக்கூடம், பிக்கட்டி பஜார் சமுதாய கூடம், மஞ்சூர் பஜார் சமுதாய கூடம், கீழ்குந்தா சமுதாய கூடம், ஒசட்டி சமுதாய கூடம், திருவள்ளுவர் நகர் சமுதாய கூடம், சேலாஸ் சிறுமலர் ஆரம்பப்பள்ளி, கொல்லிமலை சமுதாய கூடம், காட்டேரி சமுதாய கூடம், கெந்தனா சமுதாய கூடம், கோத்தகிரி புயல் நிவாரண மையம்,புனித லூக்ஸ் சர்ச், நடுவட்டம் பஜார் சமுதாய கூடம், பெரிய சூண்டி சமுதாய கூடம், பார்வுட் ஊராட்சி ஒன்றிய பள்ளி, எல்லமலை அரசு நடுநிலைப்பள்ளி, தேவர் சோலை பஜார் சமுதாய கூடம், பாடந்தொரை திருமண மண்டபம். மச்சிக்கொல்லி மட்டம் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களிலும் டிசம்பர் 1ம் தேதி காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் டிசம்பர் 1ம் தேதி அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப் பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பெறப்பட்ட மனுக்களின் மீது 3 முதல் 5 நாட்களுக்குள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மூலம் பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img