fbpx
Homeபிற செய்திகள்பபாசி புதிய நிர்வாகிகள் தேர்வு

பபாசி புதிய நிர்வாகிகள் தேர்வு

பபாசி என்று அழைக் கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தல், சென்னை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடை பெற்றது.

குமரன் பதிப்பகம் எஸ்.வைரவன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாதம் கீதம் எஸ்.கே.முருகன் செயலாளராகவும், லியோ புக்ஸ் ஏ.குமரன் பொரு ளாளராகவும், வனிதா பதிப்பகம் பெ.மயில் வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணை வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), இணைச் செயலாளராக எம். பழநி, உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ் இராம மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ஸ்பைடர் புக்ஸ் எஸ் சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங் கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகக் குழு தமிழ் உறுப்பினர்களாக நக்கீரன் ஆர்.தனுஷ், ஐஎஃப்டிஐ. ஜலாலு தீன், புலம் லோகநாதன், தமிழ்ச் சோலை பதிப்பகம் எஸ்.பிரபாகரன் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகக் குழு (ஆங்கிலம்) உறுப்பினர்களாக மயூரா புக்ஸ் ஏ.காளியப்பன், ஸ்பைடர் புக்ஸ் ஐ.முபாரக், டெக்னோ புக்ஸ் நந்த்கி ஷோர், ஜெய்கோ கே.ஸ்ரீ ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்களாக ஜே.ஹரிபிரசாத், ஏ.எஸ்.மகேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர்.சங்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களது பொறுப்பு காலம் 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை ஆகும்.

பபாசி சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img