எல்.ஐ.சி ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் வி.ஜி.விளம்பர நிறுவனம் ஆகியவை இணைந்து உங்கள் இல்லம் 2020 வீடு மற்றும் வீட்டுக்கடன் கண்காட்சியினை 27 மற்றும் 28ம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை 2 நாட்களுக்கு கோவை, பீளமேட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்துகிறது. இதன் தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இக்கண்காட்சியினை எல்.ஐ.சி ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் சென்னை. தெற்கு மண்டல மேலாளர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.
கிரிக்கெட் விளையாட்டு வீரர். நடிகர் மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் பாஸ்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் எல்.ஐ.சி ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் சென்னை தெற்கு மண்டல துணை பொது மேலாளர் (மார்க்கெட்டிங்) எஸ்.பத்மாவதி. எல்ஐசிஆப் இந்தியா கோயம்புத்தூர் கோட்டம்& முதன்மை கோட்ட மேலாளர் எம்.பிரசன்னன், தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.ஜி.ஸ்ரீராம், ஆருத்ராஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.மணி, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா& வின் மண்டல மேலாளர் (ரீடெய்ஸ்) மனோஜ் அகர்வால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
சௌபர்ணிகா புராஜெக்ட்ஸ் அண்டு இன்பிராஸ்டிரக்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராம்ஜி சுப்பிரமணியம். காசாகிராண்ட் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் பி.கே.கார்த்திகேயன். வி.எஸ்.கே.ஹவுசிங் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.விக்னேஷ் மற்றும் என்.எம்.எஸ்.குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.மணிகண்டன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கோவை ஆப்ரேஷன்ஸ் மேலாளர் எம்.நந்தா கிஷோர் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்று இருந்தன.
இக்கண்காட்சியில் எல்.ஐ.சி ஹவுசிங் பினான்சிங் நிறுவனத்தின் பிரத்தியேக கடன் வழங்கும் குழு செயல்படுகிறது.
இங்கு வீட்டுக்கடன் சிறப்பு வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வீடு கட்ட, வீட்டில் மாறுதல்கள் செய்ய மற்றும் அடமானக்கடன் ஆகியவற்றை குறைந்த வட்டி விகிதத்திலும் பொதுமக்கள் பெற முடியும்.
இக்கண்காட்சியில் வீடுகளை உடனடி முன்பதிவு செய்பவர்களுக்கு பில்டர்களின் மூலமாக தங்க நாணயம் மற்றும் ரொக்கத் தள்ளுபடி உள்ளிட்ட உடனடி முன்பதிவு செய்பவர்களுக்கு பில்டர்களின் மூலமாக தங்க நாணயம் மற்றும் ரொக்கத்தள்ளுபடி உள்ளிட்ட உடனடி பரிசுகளை பொதுமக்கள் பெற முடியும்.
நீங்கள் வாங்க விரும்பும் வீடுகளை பார்வையிட கண்காட்சியில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.



