fbpx
Homeபிற செய்திகள்‘சூப்பர் லாண்டரி ஷீட்ஸ்’ - சூப்பர் பாட்டம்ஸ் அறிமுகம்

‘சூப்பர் லாண்டரி ஷீட்ஸ்’ – சூப்பர் பாட்டம்ஸ் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி குழந்தை பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சூப்பர்பாட்டம்ஸ் நிறுவனம், தற்போது புதியதாக சலவை துறையில் ‘சூப்பர் லாண்டரி ஷீட்ஸ்’ என்னும் புதுமையான டிடர்ஜெண்டு தாள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டிடர்ஜெண்டு தாள்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் உடை கள் மற்றும் துணி டயப்பர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நச்சு இரசா யனங்கள் அற்றவை.

உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் மற்றும் அடிக்கடி தங்கள் துணிகளை துவைப் பவர்களுக்கும் இந்த புதிய தயாரிப்பு பயன்படும்.
துணிகளை நன்றாக சுத்தம் செய்யும் சலவை டிடர்ஜெண்டுகளில் பொதுவாக பாஸ்பேட், சாயம் போன்ற பல நச்சு இரசாயனங்கள் இருக்கும்.

அவை குழந்தைகளின் தோல் மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
புதிதாக அறிமுகமாகியுள்ள ‘சூப்பர் லாண்ட்ரி ஷீட்ஸ் அருமையான செறிவூட்டப்பட்ட டிடர்ஜெண்டு கலவை.

இதில் சுத்தப் படுத்தும் செயலிகள் அதிகமாகவும், நிரப்பிகள் குறைந்த அளவிலும், நச்சு இரசாயனங்கள் சேர்க்கப்படாமலும் அதிகளவில் சுத்தத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சூப்பர்பாட்டம்ஸ் நிறுவனர் பல்லவி உதகி கூறுகையில், சுற்றுசூழலுக்கு உகந்த இந்தியாவின் முதல் டிடர்ஜெண்டு தாள்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இது உங்கள் சலவை அனுபவத்தை, கடினமான, அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் மற் றும் எளிதில்லாத செயல்பாட்டிலிருந்து மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் மாற்று வதாக உறுதியளிக்கிறது.

உங்கள் சலவை தேவைகளுக்கு இனி வெவ்வேறு தயாரிப்புகளை பயன்படுத்த அவசியம் இருக்காது. சூப்பர் லாண்டரி ஷீட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயன நச்சு குறித்த கவலையும் கொள்ள தேவையில்லை.

நீண்ட காலமாக சலவை துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை நீக்க வேண்டிய மிகப்பெரிய பயணத்தில் இது ஒரு சிறு பகுதியாகும். குழந்தைகளுக்கும், அவர் களது சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான பொருளைத் தயாரிப்பதில் உறுதியாக இருந் தோம் என்றார்.

சூப்பர்பாட்டம்ஸ் சூப்பர்லாண்டரி ஷீட்கள் 10, 45, 90 தாள்கள், முறையே ரூ.99, ரூ.420, ரூ.790 விலையில் கிடைக்கின்றன. சந்தா சலுகை www.superbottoms.com http://www.superbottoms.com/ -ல் கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img