இந்தியாவின் முன்னணி ஆன்லைன் அழகு சாதன அமைவிடத்தளமான பர்ப்பிள்.காம் $75 மில்லியன் நிதி சேகரிப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது.
செக்வோயா கேப்பிட்டல் இந் தியா மற்றும் ப்ளூவென்ச்சர்ஸ் உடன் இணைந்து கெடாரா இந்த முதலீட்டாளர் பட்டியலில் இணைந்திருப்பதை பர்ப்பிள்.காம் வரவேற்றிருக்கிறது.
வெர்லின்வெஸ்ட், ப்ளூம்வென்ச் சர்ஸ், யிஷிகீ வென்ச்சர்ஸ் மற்றும் முதல்- முறை முதலீட்டாளரான செக் வோயா கேப்பிட்டல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் ஆதரவோடு, $45 மில்லியன் நிதி முதலீடு கிடைத்ததற்கு 6 மாதங்களுக்குப் பிறகு இந்த பெரும் முதலீடு பர்ப்பிள்.காம்- க்கு கிடைத்திருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் 6-8 மடங்கு வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் இலக்கை சென்றடைய இந்த முதலீடு துணை நிற்கும்.
பர்ப்பிள்.காம்- ன் இணை நிறுவன ரும் மற்றும் தலைமை செயல் அலுவலருமான மனீஷ்தனேஜா இம் முதலீடு பற்றி பேசுகையில், “கெடாரா நிறுவனத்தோடு பார்ட்னராக இணைவதில் நாங்கள் பெருமையும் உற்சாகமும் கொண்டிருக்கிறோம்.
அழகு சாதனங்களுக்கான மின்- வர்த்தக தொழில்துறையில் முதல் முறையாக அவர்கள் கால் பதிக்கின்றனர். இந்த முதலீட்டின் மூலம் எமது தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவோம். வித்தியாசமான அழகு சாதனங்களை உருவாக்குபவர்கள் மீது முதலீடு செய்வோம் மற்றும் சாத்தியம் உள்ள நிறுவனங்களை கையகப்படுத்துவதற்காக ஒரு பொக்கிஷத்தை உருவாக்குவோம்,” என்று கூறினார்.
கெடாரா நிறுவனத்தின் இணைதலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக பங்குதாரர் சுனிஷ்ஷர்மா மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் அனந்த்குப்தா கூறியதாவது: புத்தாக்கமான, பேரார்வம் கொண்ட மற்றும் வலுவான செயல்திறன்மீது கூர்நோக்கம் கொண்ட குழுவால் வழி நடத்தப்படும் இந்நிறுவனம், சந்தையில் முதன்மை வகிக்கும் வளர்ச்சியை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
இந்தியா முழுவதிலும் அழகுசாதனம் மற்றும் பெர்சனல்கேர் செயல்தளத்தை ஜனநாயகப்படுத்தும் கோட்பாடு மீது கூர்நோக்கம் செலுத்துகிற ஒரு தனித்துவமான செயல்தளத்தை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
பர்ப்பிள் நிறுவன குழுவோடு நெருக்கமாக பணியாற்றி அவர்களது தொலைநோக்கு குறிக்கோளை எட்ட உதவுவதை எதிர்நோக்குகிறோம் என்றார்.



