fbpx
Homeபிற செய்திகள்கொரோனா பேரிடர் காலத்தில் சேவை புரிந்த சமூக ஆர்வலர்களுக்கு அரிமா சங்கம் விருது

கொரோனா பேரிடர் காலத்தில் சேவை புரிந்த சமூக ஆர்வலர்களுக்கு அரிமா சங்கம் விருது

நேரு நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் நடைபெற்றது. இதில், கொரோனா பேரிடர் காலத்தில் சேவை செய்த சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் தலைவர் நந்தகுமார் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நேரு நகர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக செந்தில் குமார், செயலாளராக முகம்மது செமீக், பொருளாளராக ஹரீஷ் பாஸ்கர் ஆகியோர் பொறுப்பேற்று கொண் டனர்.

புதிய உறுப்பினர்களுக்கு அரிமா சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி முன்னாள் ஆளுநர் காளிசாமி சிறப்புரையாற்றினார். கோவை ராயல் அரிமா சங்கம் மற்றும் காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்கம் என இரு புதிய சங்கங்களின் நிர்வாகிகளாக முறையே சுரேஷ் குமார், விஜயராகவன் துரை, கார்த்திக், திவாகர், குணசேகரன், மதன்குமார், சம்பத்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு மாநில ஜி.எல்.டி.ஒருங்கிணைப்பாளர் மதன கோபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் கல்வி நிதியாக ரூ.25000 உட்பட 5 லட்சம் மதிப்பிலான சேவை திட்டங்களுக்கான காசோ லையை நேரு நகர் அரிமா சங்க தலைவர் செந்தில்குமார், முதல் துணை ஆளுநர் ராம்குமார் மற்றும் இரண்டாம் துணை ஆளுநர் ஜெயசேகரன், ஜி.எல்.டி. ஒருங் கிணைப்பாளர் நித்தியானந்தம் ஆகி யோர் வழங்கினர்.

விழாவில், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்த காவல்துறை உதவி ஆய்வா ளர் ராக்கி மகேஷ், மருத்துவத் துறையினர் டாக்டர் ராமர், டாக்டர் பிரசன்ன மணிகண்டன் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 105 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் ஆளுநர் டாக்டர் பழனிச்சாமி, சண்முகம், ஆறு முகம், மணி மற்றும் மாவட்ட அமைச்சரவைச் செயலாளர் சூரி நந்தகோபால், உதயகுமார், கோபாலகிருஷ்ணன், பிரகாஷ், ஜிஎல்டி ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியம், ஜி.ஏ.டி. ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், ஜி.எம்.டி. ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமாரி, மாணிக்கம் மண்டலத் தலைவர் சண்முகம், வட்டாரத் தலைவர் கனகராஜ், உணவுத் திட்ட மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, கண் ஒளி மாவட்டத் தலைவர் செல்வராஜ், குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாவட்டத் தலைவர் ராஜ்மோகன், சுற்றுப்புறச்சூழல் மாவட்டத் தலைவர் தனசேகர், முன்னாள் தலைவர் ஜெகதீசன், காளியப்பன், சுகுமார், சின்ராஜ், லோகநாதன், சுப்பிரமணியம், ரவிச் சந்திரன், முத்துக்குமாரசாமி, அஸ்வின், பாலாஜி, சம்பத்குமார் மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜ், வெங்கடேஷ், துரைசாமி, சௌந்தர்ராஜ், பால்ராஜ், சூரிய பிரகாஷ், செல்வராஜ், ஜெகநாதன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img