கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விமானப்படை கமாண்டிங் ஆபிசர் விங் கமாண்டர் நிதின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே பிளாஸ்டிக் பொருட்களின் ஆபத்தையும் அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் அவர்கள் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் அதை எடுத்துக் கொண்டனர். கல்லூரியின் அனைத்து துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவ மாண விகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் டீன் ஜெயா மற்றும் மருடேஸ்வரன், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் அனந்தமூர்த்தி, ஆனந்த் மற்றும் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி அலுவலர் பிளையிங் ஆபிசர் ஜெய்னு லாப்தீன், லெப்டினன்ட் ரவிக்குமார் மற்றும் மனோஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



