மூலப்பொருட்கள் கடும் விலை உயர்வால் கோவையில் பம்ப் செட்டுகள் விற்பனை மந்தமாக இருப்பதாக சீமா தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைவர் கே.வி.கார்த்திக் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எஃகு, அலுமினியம், தாமிரம், எரிபொருள், பிளாஸ்டிக் மற்றும் காகிதத்தின் விலை ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நிலையாக உயர்ந்து வருகின்றன.
பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மோட்டார்கள் மற்றும் பம்பு களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான தாமிரத் தின் விலை கடந்த ஆண்டை விட தற்போது 66% உயர்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் கேபிள் விலை மாற்றியமைக்கப்படுகிறது. மோட்டார்களுக்கு பயன்படுத்தப்டும் அலுமினியத்தின் விலை 68%க்கும் அதிகமாகி உள்ளது.
லேமி னே ஷன்ஸ்டீல், தேனிரும்பு மற்றும் வார்ப்புகளின் விலை 60%க்கும் அதிக மாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் மூலப்பொருள்கள் மற்றும் பம்ப் உற்பத்திக்கான போக்குவரத்து செல வுகளும் அதிகரித்துள்ளன.
பம்புகளை அதிக அளவில் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு போர்வெல் கடைந்து பம்புகளை நிறுவுவதற்கான செலவுகள் ஓராண் டில் இருமடங்காக அதிகரித் துள்ளது. இந்த மிகப்பெரிய விலை உயர்வால், பம்ப் கொள்முதல் மற்றும் பம்ப் தயாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இந்திய சந்தையில் பம்புகளுக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் பம்ப்செட் தேவை குறைந்துள்ளதால் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி நிலையில் 40% மட்டுமே வேலை செய்கிறார்கள். மேலும் பெருமளவிலான பணி நீக்கங்கள் மற்றும் வேலைவெட்டுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த தீபாவளி சீசனில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க இயலாத நிலைக்கும் தள்ளப்படலாம். தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA) மற்றும் இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (IPMA) ஆகிய இரண்டு பெரிய பம்ப் உற்பத்தியாளர் சங்கங்களுக்கிடையேயான கூட்டுக் கூட்டத்தில் இந்த விஷயங்கள் வரிவாக விவாதிக்கப்பட்டன.
மூலப்பொருட்கள் விலை உயர்வு எஃகு நிறுவனங்களின் நிகர லாபத்தை உயர்த்த வழிவகுத்தது. JSW, TATA ஸ்டீல் மற்றும் SAIL போன்ற நிறுவனங்கள் கடந்த மூன்று காலாண்டுகளில் தொடர்ந்து 1000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.
தென்னிந்திய பொறியியல் உற்ப த்தியாளர்கள் சங்கம் SIEMA) மற்றும் இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (IPMA) ஆகிய தொழில் அமைப்புகளின் கண்ணோட்டத்தில், இந்த எஃகு நிறுவனங்கள் ஈட்டிய அபரிமிதமான நிகர லாபங்கள், இந்திய விவசாயி, இந்திய குறு, சிறு, தொழில் நிறுவனங்கள் மற் றும் இந்தியத் தொழிலாளர்கள் ஆகியோரின் நஷ்டத்தின் மூலம் ஈட் டப்பட்டதாகவே கருதப்படுகிறது.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக உற்பத்தி தொழில்தான் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை அளிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்னும் இலக்கை அரசு நிர்ணயித்து இருக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை இந்த துறை இழந்துள்ளது துரதிஷ்டவசமானது.
மேலும், தற்போதைய கட்டுக் கடங்காத மூலப்பொருட்கள் விலை இந்த துறையில் அதிக வேலை இழப்புகளை ஏற்படுத்தும். இதனால் சமூக அமைதிக்கு குந்தகம் விளையும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



