கோவை காளப்பட்டி பகுதி அதிமுக சார்பில் 34-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு அதிமுக வின் 50ஆம் ஆண்டு பொன்விழா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி வேட்டி – சேலை கொண்ட பரிசுத்தொகுப்பினை அம்மா பேரவை பகுதி செயலாளர் குறிஞ்சிமலர் பழனிசாமி, பகுதி அதிமுக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சண்முக சுந்தரம், சந்திரசேகர், சுரேஷ், மௌனகுருசாமி, அருள்செல்வன் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



