fbpx
Homeபிற செய்திகள்ஏசியன் பெயிண்ட்ஸ்- தானா பானா அறிமுகம்

ஏசியன் பெயிண்ட்ஸ்- தானா பானா அறிமுகம்

இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நேர்த்தியான சுவர் அமைப்புகளின் தனித்துவமான தொகுப்பான -ஆசியன் பெயிண்ட்ஸ் ராயல் ப்ளேவின் தானா பானா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கைவினை மற்றும் நெசவுகளின் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட தானா பானா, எண்ணற்ற உணர்ச்சிகள் மற்றும் நினைவுகளைத் தூண்டும் ஒரு கலைப் படைப்பாகும்.

நமது மூதாதையர் வீடுகளில் இருந்த சர்பைஸ் முதல் எங்கும் நிறைந்திருக்கும், பழங்கள் மற்றும் பூக்களை வைத்திருந்த விக்கர் கூடைகள் வரையிலும், பாட்டியின் விலை மதிப்பற்ற இக்கட்புடவை முதல் மணமகளின் டிரௌஸில் உள்ள பந்தேஜ் துப்பட்டா வரை, தானா பானா நமது சுவர்களையும், வாழ்வையும் அலங்கரித்திடும் வகையில், விலை மதிப்பற்ற கைவினைப் பொருட்களை மீண்டும் உருவாக்கியுள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித்சிங்கிள் கூறியதாவது:

ஏசியன் பெயிண்ட்ஸில் நாங்கள் ராயல் ப்ளே தானா பானாவை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் இதயம் மற்றும் ஆன்மா -கைவினைஞர்கள் மற்றும் அவர்களின் கைவினைத் தயாரிப்புகளாகும்.

இந்த கைவினைப் பொருட்களை நமது சுவர்களுக்கு தடையின்றி மாற்றுவது வலுவான ஒரு சொந்த உணர்வை உருவாக்குவது மட்டுமல்லாமல்,

தனித்துவமான அலங்கார கருப்பொருளையும் உருவாக்கும்- இது பூர்வீக மற்றும் சமகால தன்மை இரண்டையும் வழங்கும்.

இந்த சேகரிப்பு இந்திய வீடுகளில் எளிதில் பொருந்தும் மற்றும் இனிமையான நினைவுகளை எழுப்பும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img