இந்தோ நேபாள் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் நேபாள் நாட்டில் பொக்ராவில் உள்ளரங்க சாலா விளையாட்டரங்கில் கடந்த 1-ம் தேதி முதல் 4 தேதி வரை நடைபெற்றது.
இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங் கம் சார்பாக தமிழக வீரர்-வீராங் கனைகள் பங்கு பெற்ற கபடி விளை யாட்டில்- 19 வயதிற்குள் மற்றும் 19 வயதுக்கு மேல் ஆண்கள், பெண்கள் இரு அணிகளும் தங்கம் வென்றன. வாலிபால் மற்றும் கால்பந்து ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றனர்.
தடகளப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கம், வெள்ளி வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்து, இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர்.
தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் சார்பாக இந்திய அணியில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிய விளையாட்டு வீரர், வீராங்கனை களை தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்க கௌரவத் தலைவர் கருப்புசாமி, உறுப்பினர்கள் மணியரசு, பிரகாஷ், கார்த்திக் குமார், ரவிகுமார், தேவ காந்தன், உமா மகேஸ்வரி, ஜெயவேல் ஆகியோர் பாராட்டினர்.
தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பொதுச்செயலாளர் நாகராஜ் பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.



