fbpx
Homeபிற செய்திகள்வார்டு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கிய கோவை பா.ஜ.க வேட்பாளர்

வார்டு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கிய கோவை பா.ஜ.க வேட்பாளர்

கோவையில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகி ஒரு ஓட்டு வாங்கிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கோவை அருகே உள்ள குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு ஓட்டு வாங்கி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட அருள் ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள் என 5 பேர் உள்ளனர். அவரையும் சேர்த்தால் மொத்தம் 6 பேர். இது தவிர அவ ருக்கு உறவினர்கள், நண் பர்கள் என பலர் இருக்கலாம்.

ஆனால் அவர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கியது மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டதுதானா? வேறு யாரேனும் போட் டனரா? என்று அந்த பகுதிவாசிகள் நகைச் சுவையாக பேசுகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img