fbpx
Homeபிற செய்திகள்உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுக வென்ற இடங்கள்

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுக வென்ற இடங்கள்

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 6 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு, காரமடை, ,கிணத்துக்கடவு, மதுக்க்ரை, பெ.நா பாளையம், எஸ்.எஸ்.குளம், சுல்தான் பேட்டை, குருடம்பாளையம், மாதம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்தது.

இதேபோல் காவிலிபாளையம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது அதிமுக 98 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

மாதம்பட்டி 3-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவப்பிரகாசம் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் ராஜா 190 வாக்குகள் பெற்றுள்ளார்.

மதுக்கரை ஒன்றியம் சீரபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த முருகேசன் 168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கிணத்துக்கடவு முத்தூர் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 381 மொத்த வாக்குகள் உள்ளன.

இதில் பதிவானது, 288ல் திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்குமாரபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 2312 வாக்குகள் பதிவாகின.
இதில் திமுக ஆதரவு வேட்பாளர் நாராயண மூர்த்தி 1451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக ஆதரவு வேட்பாளர் சரஸ்வதி 834 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து மற்ற பகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படிக்க வேண்டும்

spot_img