fbpx
Homeபிற செய்திகள்விவோ ஸ்மார்ட் போன்களுக்கு ஏராளமான சலுகைகள்

விவோ ஸ்மார்ட் போன்களுக்கு ஏராளமான சலுகைகள்

பண்டிகை காலத்தை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக, உலகளாவிய ஸ்மார்ட் போன் பிராண்டாகத் திகழும் விவோ நிறுவனம், தனது விவோ எக்ஸ்70 மாடல், வி21, ஒய்73 ஆகிய மாடல்களுக்கு வரும் 15-ம் தேதி வரை ஏரா ளமான சலுகைகளை அறிவித்துள்ளது.

புதிய எக்ஸ்70 மாடல் ஸ்மார்ட் போன்களில் அல்ட்ரா-சென்சிங் சிம்பல் மற்றும் விவோவின் புரபஷனல் இமேஜிங் வி1 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வி மற்றும் ஒய் மாடல் ஸ்மார்ட்போன்களும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சலுகை இந்தியா முழுவதும் உள்ள ஆப்லைன் ஸ்டோர்கள், விவோ இந்தியா இ-&ஸ்டோர் மற்றும் முக்கிய மின்னணு வணிகத் தளங்களிலும் கிடைக்கிறது.
வெறும் 101 ரூபாய் செலுத்தி பஜாஜ் பைனான்ஸ் மூலம் விவோ ஸ்மார்ட் போனை வாங்கலாம்.

சிட்டி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோடக் மஹேந்திரா பேங்க், ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்டிபி பைனான்ஸ் மூலம் எக்ஸ்70 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

எச்டிபி பைனான்ஸ் மூலம் எக்ஸ்60, வி மற்றும் ஒய் மாடல் போன்களை வாங்குபவர்களுக்கு 2500 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மூலம் ஒய்72 மற்றும் ஒய்73 போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 1500 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம்.

டிவிஎஸ் கிரெடிட் மூலம் மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஒய்73, ஒய்21 மாடல் போன்களை தவணை முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தவணை கேஷ்பேக் சலுகையாக வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட திட்டத்தில் எக்ஸ்70 மாடல் போன்களுக்கு செயலாக்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் எந்தவித முன் பணமும் செலுத்த வேண்டியது இல்லை. ஒய்73 மாடலுக்கு 10000 ரூபாய் வரையிலான ஜியோ பலன்களும், பிற ஒய் மாடல்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரையிலான ஜியோ பலன்களும் கிடைக்கிறது என்று விவோ நிறு வனம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img