fbpx
Homeபிற செய்திகள்உடல் பருமன், பதட்டத்தைக் குறைக்க காருண்யாவில் பிட் இந்தியா ப்ரீடம் ரன் 2.0

உடல் பருமன், பதட்டத்தைக் குறைக்க காருண்யாவில் பிட் இந்தியா ப்ரீடம் ரன் 2.0

அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் வழிகாட்டுதலின்படியும், காருண்யா நிகர நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பால் தினகரனின் ஆலோசனையின் படியும், பிட் இந்தியா ப்ரீடம் ரன் 2.0 காருண்யா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

ஆரோக்கியத்தை பேணவும், சோம்பல் களைய, உடல் பருமனை குறைக்க, மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் இந்த திட்டம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வகுக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக மாணவர் கள் அவரவர் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 120 பேராசிரியர்கள், ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு மத்திய அரசால் இணையதளம் வாயிலாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை காருண்யா பல்கலைக் கழக பதிவாளர் எலைஜா பிளசிங் கொடியசைத்து துவக்கி வைத் தார். உடற்கல்வித் துறை இயக்குநர் காலேப் ராஜன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img