fbpx
Homeபிற செய்திகள்புதிய விதிமுறைகளுக்கு வரவேற்பு

புதிய விதிமுறைகளுக்கு வரவேற்பு

நீண்ட நாட்களாக கட்டிட கட்டுமானத்திற்கு அனுமதி கிடைப்பதில் நடந்து வந்த இழுத்தடிப்பு ஒழிந்தது. இதன்மூலம் லஞ்சம் பெரிய அளவுக்கு ஒழிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

மாநகராட்சிகள், சில நகராட்சிகளில் மட்டுமே ஆன்லைன் முறையில் கட்டிடங்கள் கட்ட விண்ணப் பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறுதல், கட்டண வசூல் பணிக்கான புதிய இணையதளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கட்டிட அனுமதி விண்ணப்பங்களை TNURBANEPAY.in.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் இணைப்பாக அளிக்க வேண்டிய ஆவணங்களை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில் சார்ந்த வல்லுநர் வாயிலாக இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மனுதாரர்கள் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப் படும் விண்ணப்பங்கள் TNURBANEPAY.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட நகரமைப்பு ஆய்வாளர், பொறியாளர் பணிப்பட்டியலில் சேர்க்கப்படும்.

இதையடுத்து பொது கட்டிட விதிகள் அடிப்படையில் வரைபடம் உள்ளதா என்பதை மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவு விவரங்கள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.

படிக்க வேண்டும்

spot_img