ட்வின் ஹெல்த் நிறுவனம் (Twin health), முழுஉடல் டிஜிட்டல் ட்வின் (whole body digital twin) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதன் வளர்ச் சியை மேற்கொள்ள 140 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1000 கோடி) நிதிதிரட்டி உள்ளது.
கடந்த 2018-ல் நிறுவப்பட்ட ட்வின் ஹெல்த், முழுஉடல் டிஜிட்டல் ட்வின் டெக்னாலஜியைக் கண்டுபிடித்து, மக்களுக்குச் சேவையாற்றி வருகிறது. ட்வின்ஹெல்த் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜஹாங் கீர் முகமது கூறியதாவது:
முழுஉடல் டிஜிட்டல் ட்வின் உங்களுக்காக உங்களுடன் வாழ்கிறது. உடலில் இருக் கும் மாற்றங்களைக் கண்டறிந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லும் என்றார்.
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுஉலகின் இரண்டாவது மிகஅதிக எண்ணிக்கையாகும். 2045-க்குள் இது 13 கோடியாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்வின்ஹெல்த் இணை நிறுவனர் டாக்டர் மாலுக் பேசும்போது, நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களால் இந்தியாவில் 20-ல் ஒருவர் இறக்கின்றனர். தற்போதுள்ள சிகிச்சைகள் நோய்க்கான மூலகாரணத்தை தீர்க்காது.
ட்வின் ஹெல்த் ஆனது நோய்க்கான வேர்வரை ஆராய்ந்து அதை சரிசெய்யும் பணியை மேற்கொள்கிறது என்றார். ட்வின் ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சி குழு டிஜிட்டல் ட்வின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாள்பட்ட நோய்களை சரிசெய்வதற்கான உலகின் முதல் சீரற்ற கட்டுப்பாடு சோதனையை (RCT) மேற்கொள்கிறது.
ட்வின் ஹெல்த் நிறுவன தலைமை விஞ்ஞானி, ஆலோசகர் மற்றும் இந்திய நீரிழிவு அகாடமியின் தலைவர் சஷாங்க் ஜோஷி கூறியதாவது: ஒரு விஞ்ஞானியாக தற்போதைய ஆர்சிடி முடிவுகள் மற்றும் முழுஉடல் டிஜிட்டல் ட்வின் தொழில் நுட்பத்தால் ஈர்க்கப்பட்டேன்.
இதன்மூலம் டைப் 2 நீரிழிவு நோயை சரிசெய்ய முடியும் என்பது அறிவியல் மூல மாக நிரூபணமாகி உள்ளது என்றார். ஐஐடி மெட் ராஸ் ரிசர்ச் நிறுவனர் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசும்போது, நீரிழிவு நோயை சரிசெய்ய புதிய தொழில் நுட்பத்துடன் ட்வின்ஹெல்த் கை கொடுக்கும்.
சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விரிவான டேட்டா மூலம், ஒவ்வொரு நபரும் ஒருவரின் உடலைக் கவனமாக கண்காணிக்கலாம் என்றார்.



