அன்னூரில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.ஏ.கருப்புசாமியை ஆதரித்து பசூர் ஊராட்சிக்குட்பட்ட பசூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளருமான வி.கிருஷ்ண குமார் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.
அவருடன் விவசாய அணி மாவட்ட செயலாளர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்
சேவூர் வேலுசாமி, மாணவரணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ராஜா, நகர பொருளாளர் வடுகை கனகு, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், வடுகை நாகராஜ், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சின்னு என்கிற வெங்கடாசலம், மின்னல் சீனிவாசன், வக்கீல் தினேஷ் குமார், அருண், பசூர் புரு ஷோத்தமன், பசூர் செல்வராஜ், தினேஷ்குமார் முரட்டுக்காளை முரளி, முருகன், அண்ணாதுரை, மகேஷ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.



