ஈரோட்டில் அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என இந்திய திராவிட மக்கள் முன் னேற்ற கட்சி வலியுறுத்தி உள்ளது.
இக்கட்சியின் கூட்டம், ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில், முதன்மை பொதுச்செயலாளர் எம்.செந்தமிழன் தலைமையில் நடந்தது.
மாநில துணைத் தலைவர் செல்லமுத்து, கொள்கை பரப்பு செயலாளர் கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் வீரா சிதம்பரம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மக்கள் கழக தலைவர் ஏசிகண்ணன், அருந்ததியர் விடு தலை இயக்க மாநில தலை வர் ஆர்.கே.சாமிநாதன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், ஈரோட்டில் அம்பேத்கர் முழு உருவசிலை அமைக்க வேண்டும்.
சமூக ஆர்வல ரான வீரா சிதம்பரத்துக்கு அம்பேத்கர் விருது வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கான இடஒது க்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



