கோவைஆர்.எஸ்புரம் கவுளி பிரவுன் சாலை ரத்னா மெடிக்கல் சென்டரில் வெல்பி ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் உலக இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைவர் முத்தையா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயத்திற்கான பரிசோதனை செய்தும், உடற்பயிற்சிகள் மூலமும் இருதயத்தை பாதுகாத்து கொள்ளமுடியும். இந்த மருத்துவமனையில் எலக்ட்ரோ பிசியாலஜி சிறப்பு வாய்ந்தது என்றார்.
ரத்னா நிறுவனங்களின் கிளை நிறுவன தலைவர் ரத்னா பழனியப்பன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், மனநல மருத்துவர் மோனி, ராமசந்திர பிரசாத், பி.எஸ்.ஆர்.சில்க்ஸ் மணி, ஹரிஷ், சந்தோஷ், ஆர் கிடெக்ட் ஜெயக்குமார், எஸ்.பிரபாகரன், ஆடிட்டர் விட்டல், சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



