தேசிய கூட்டுறவு கருத்தரங்கம், இந்திய கூட்டுறவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கூட்டுறவு மூலம் வளம் என்ற கனவை நனவாக்குவதற்கான மாநாட்டின் நேரடி ஒளிபரப்பில் (வீடியோ கான்பரன்ஸ்) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை இணையதளம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், விவசாய குழுக்கள் அனைவரும் காண, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ். பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
செஞ்சேரி மலையடி பாளைய தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப் பினர் களின் கருத்துகளை எஸ்.யு. சதிஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் நா.பாரதி, சங்கத் தலைவர், செயலாளர், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.



