கோவையில் உள்ளாட்சி இடைத்தோ்தலில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் 3 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 2 ஊராட்சித் தலைவா், 13 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 16 இடங்களுக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 16 இடங்களுக்கு 94 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இதில் பரிசீலனையின்போது 2 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 92 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் வேட்புமனுக்கள் திரும்பப் பெற இறுதி நாளான நேற்று 38 போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா். இதில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஒருவரும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 2 போ் என 3 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 21 வேட்புமனுவில் ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 20 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் நேற்று 9 போ் வேட்புமனுவை திரும்பப் பெற்றனா். தற்போது 11 போ் போட்டியிடுகின்றனா். மேலும் 2 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 4 பேரும், 10 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 39 பேரும் போட்டியிடுகின்றனா். மொத்தம் 13 இடங்களுக்கு 54 போ் போட்டியிடுகின்றனா் என்றனா்.



