சென்னை அம்பத்தூரில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ஷோரூம் -சில்லறை விற்பனையகத்தை துவக்கி உள்ளது.
சென்னையில் பிரீமியம் எஸ்யூவிகளுக்கான வலுவான சந்தை சாத்தியத்தை அங்கீகரித்து, இக்கார் தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளக் கூடிய மொத்தம் 16 மையங்களை இயக்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் மேலும் 25 தொடர்பு மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தற்போது இந்தியா முழுவதும் மொத்தம் 282 தொடர்பு மையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சில்லறை விற்பனை மையங்களை 300 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா சிசிஓ கவுரப் குப்தா கூறுகையில், அம்பத்தூர் கிளை திறப்புவிழா, நெருக்கமாக சில்லறை விற்பனையை விரிவுபடுத்துவதற்கானது.
இது எங்களது திட்டங்களுடன் ஒத்துப்போகிறது. இங்கு விற்பனை, சேவை, உதிரிப்பாகங்கள், துணைக்கருவிகள் உட்பட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றார்.
எம்ஜி அம்பத்தூர் டீலர் பிரின்சிபால் வினய் மோகன் கூறியதாவது: முன்னோடி மற்றும் எதிர்கால முன்னோடி பிராண்டாக, எம்ஜி ஏற்கனவே இந்திய வாகனத்துறையில் புதுமை மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த அணுமுறையின் பின்னணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பிராண்டுடன் இணைந்து இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அம்பத்தூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் தனித்துவமான வாகன சில்லறை விற்பனை அனுபவத்தை வழங்க எம்ஜி-இன் வலுவான பிரிட்டிஷ் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பக்கவனம் ஆகியவற்றைப் பயன்படுத்துவோம் என்றார்.
எம்ஜி மோட்டார் வாகனங்கள் பிரிட்டிஷ் பிரதமர்கள், பிரிட்டிஷ் ராயல் குடும்பம் உட்பட பல பிரபலங்களால், ஸ்டைலிங், நேர்த்தி, உற்சாகமான செயல் திறன் போன்ற காரணங்களால் பெரிதும் விரும்பப்பட்டன.
குஜராத்தின் ஹலோலில் உள்ள அதன் அதிநவீன உற்பத்தி வசதி, ஆண்டுக்கு 80 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.



