தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சியில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் வடிகால் தூய்மைப்பணி சிறப்பு முகாம் நடை பெற்றது.
இந்த முகாமையொட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது.
மேலும் அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள குப்பைகள், கட்டிட கழிவுகள் மற்றும் சுகாதா ரமற்ற முறையில் இருக்கும் முட்புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தூய்மை படுத்தப்பட்டது.
இந்தப் பணிகளை தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பேரூராட்சியில் நடை பெற்று வரும் திட்டப்பணி மற்றும் தற்போது மழை காலம் என்பதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்யப்படுகிறதா என்றும் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.



