கரூர், தாந்தோணி கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் சார்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தாந்தோணிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் முன்பு, மாவாட்ட பொறுப்பாளர் கஸ்தூரி தங்கராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தாந்தோணி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குழந்தைவேல், அவைத்தலைவர் இராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



