fbpx
Homeபிற செய்திகள்மலபார் கோல்டு டைமண்ட்ஸ் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் பொதுமக்களுக்கு இலவச கொ ரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

மலபார்கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் சிஎஸ்ஆர் CSR (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி சென்னை தி. நகர் மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக அகரம் எஸ்.பி. ஆர்.கோவில் தெருவில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு பொன், வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கங்களின் கூட் டமைப்பு உடன் இணைந்து, இலவச தடுப்பூசி முகாமை நடத்தியது. முகாமை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பொன் வெள்ளி நகைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வாசுதேவன் மற்றும் மாநில செயலாளர் விஜயன்குமார், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் வடக்கு மண்டல தலைவர் அமீர்பாபு, மண்டல துணை வர்த்தகத் தலைவர் ராஜசேகரன் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை துணை தலைவர் ஷாநவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் சுமார் 300 டோஸ் இலவச கொரோனா தடுப்பூசிகள் பொது மக் களுக்கு போடப்பட்டன.

இவை தவிர மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக ரமான வணிகத்திற்கு அதன் சமூகப் பொறுப்பு முன் முயற்சிகள், இதர காரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி,வீட்டுவசதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

படிக்க வேண்டும்

spot_img